search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மழை"

    • காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    காரைக்கால்:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

    • சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நவம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் நவம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் 27 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 3 செ.மீ, பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூவிருந்தவல்லியில் தலா 2 செ.மீ மழை பதிவு.

    ஆர்.கே.பேட்டை, ஆவடி, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    • சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
    • டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.

    இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில்,

    தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் உள்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவிழக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நாமக்கல், கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது.
    • மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நீண்ட தூர செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக வந்தன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், மதுரை, திருச்செந்தூர், செங்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகாலையில் விழுப்புரத்தை நெருங்கின.

    அங்கிருந்து சென்னை வரும் வழி முழுவதும் பலத்த மழை பெய்ததால் ரெயில்கள் குறித்த வேகத்தில் இயக்க முடியவில்லை. ஒருசில இடஙக்ளில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.

    எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது. விழுப்புரம் அருகே அந்த ரெயில் நின்றதால் அதனை தொடர்ந்து வந்த எல்லா ரெயில்களும் ஒவ்வொரு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    இதனால் அதிகாலை 3 மணிக்கு எழும்பூர் வந்து சேர வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதமாக வந்தது. அதனை தொடர்ந்து சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை, ராமேசுவரம், சோழன், நெல்லை உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன. மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

    சீரான மழை சுமார் 2 மணி நேரம் தொடரும். சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும்.

    ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.

    மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று இரவு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.

    இதையொட்டி நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    துணை முதலமைச்சர் ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * மழையை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 329 முகாம்கள் தனியார் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    * அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.

    * மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.

    • வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.

    இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    • நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    அதன்படி நேற்று இரவு முதல் இன்று காலையில் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×